இடைத்தேர்தலில் பா.ஜவுக்கு அதிமுக அழைப்பு

சென்னை : ”இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றிக்கு பணியாற்றுவோம்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் நடக்கும், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான, தே.மு.தி.க., – பா.ம.க., தலைவர்களை சந்தித்து, அ.தி.மு.க., வேட்பாளருக்கு, அமைச்சர்கள் ஆதரவு கோரினர். ஆனால், பா.ஜ., நிர்வாகிகளை யாரும் சந்திக்கவில்லை. இது, பா.ஜ.,வினரிடம், அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சென்னையில் உள்ள, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகம் சென்றார். அங்கு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்தார். 

அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினார். இது குறித்து, பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது: இரண்டு தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்யும் வகையில், மிக தீவிரமாக செயல்பட உள்ளோம். பா.ஜ., முழு ஆதரவை தர வேண்டும் என, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள், எங்களின் அகில இந்திய தலைமையை, பல முறை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். 

‘தமிழக பா.ஜ., சார்பில், யாரெல்லாம் பிரசாரத்திற்கு வர உள்ளனர்’ என்ற விபரங்களை கேட்க, அமைச்சர் ஜெயகுமார் வந்திருந்தார். ஏற்கனவே இருக்கிற கூட்டணி என்பதால், எவ்வித பிசிறும் இல்லாமல் பேச்சு நடந்தது. பா.ஜ., சார்பில், யாரெல்லாம் பிரசாரத்திற்கு செல்வர் என்ற பட்டியலை, விரைவில் கொடுப்போம். அ.தி.மு.க., சார்பில், எவ்வித கருத்து வேறுபாடும் சொல்லப்படவில்லை; நாங்களும் சொல்லவில்லை. விக்கிரவாண்டியில், தி.மு.க., தோற்கடிக்கப்பட்டாக வேண்டும். நாங்குநேரியில், காங்கிரஸ் துடைத்தெறியப்பட வேண்டும். அதை உறுதிப்படுத்த, நாங்கள் செல்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார். 

நகை கொள்ளையர்களின் தலைவன் எங்கே? விசாரணை வளையத்தில் சப் இன்ஸ்பெக்டர்.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் சுவற்றில் ஓட்டை போட்டு ரூபாய் 13 கோடி மதிப்பிலான  நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தடயங்களை சேகரித்த போலீசார் வடமாநில கொள்ளையர்களின் செயல் என்று முதல் கட்டமாக விசாரணையில் தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் 6  பேரை கைது செய்து விசாரணையும் நடந்தது. இந்த சம்பவங்கள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நிமிடத்திற்கு நிமிடம் பிரேக்கிங் நியூசானது.

இந்த நிலையில் தான் திருவாரூர் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் தப்பி ஓட முயன்ற போது மணிகண்டன் என்பவன் பிடிபட்டான். அவனிடம் இருந்த தங்க நகைகளையும் மீட்ட போலீசார் தப்பி ஓடிய சுரேஷை தேடினார்கள். ஆனால் அவன் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு தலைமறைவானான்.
 

அதன் பிறகே இது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில வங்கிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட முருகன் தலைமையிலான கும்பல் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் முருகன் தலைமறைவாகியுள்ளனர். அதை தொடர்ந்து அவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளையன் முருகன் வெளி மாநிலங்களில் கொள்ளையடித்த இடங்கள், கொள்ளையடித்த நகைகள், பணங்களின் மதிப்பு முழுமையும் தெரிந்த, அவனது கூட்டாளியான திருவாரூரில் வசிக்கும் மாஜி தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் (தற்போது வேறு பிரிவில் இருப்பவர்) க்கு மட்டுமே, அவன் இருக்கும் இடம் தெரியும் என்றும், அவன் கொள்ளையடித்து கொடுத்த பங்கில் திருவாரூர் அருகில் உள்ள கிராமத்தில் வீடு, சென்னையில் வீடு, கிராமத்தில் விவசாய நிலம் உள்பட பல சொத்துகளை வாங்கி குவித்துள்ளதையும், பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கிடந்த காருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து பயன்படுத்தி வருவது பற்றியும் ஜ ஜி வரை திருவாரூர் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.
 

இந்த சப் இன்ஸ்பெக்டரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால் முருகனை பிடிப்பதுடன் பழைய சம்பவங்களும் தெரிய வரும் என்றும் கூறியுள்ளனர். இந்த தகவல்களை சேகரித்த காவல் உயர் அதிகாரிகள், அந்த சப்- இன்ஸ்பெக்டரை விசாரணைக்கு கொண்டு வரும் முயற்சியில் உள்ளனர். அது பற்றி இன்று திருவாரூர் போலீசாரிடம் பேசியுள்ளனர். திருவாரூர் போலீசாரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்த சப் இன்ஸ்பெக்டர் எப்போது விசாரணைக்கு போவார் என்று..

மானாமதுரையில் வங்கியில் கொலை முயற்சியில் ஈடுபட முயன்றவர்கள் மீது காவலாளி துப்பாக்கி சூடு

மானாமதுரையில் வங்கியில் கொலை முயற்சியில் ஈடுபட முயன்றவர்கள் மீது காவலாளி துப்பாக்கி சூடு

மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கனரா வங்கியில் தங்கமணி என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். இன்று காலை 5 பேர் கொண்ட  கும்பல்  ஒன்று அவரை தாக்கி கொலை செய்யும் முயற்சியில் இறங்கியது. அப்போது அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை பயன்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட முயன்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். வங்கி காவலாளி சுட்டதில் தமிழ் செல்வம் என்பவர் காயம் அடைந்தார். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக  முன்னாள் ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் கொலைக்கு பழிவாங்க இந்த கொலை முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.


Chennai Power Cut | சென்னையில் சிட்கோ, பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (1-10-2019) மின்தடை!

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம்

சென்னையில் நாளை (1-10-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

ஐ.ஐ.டி பகுதி : காந்தி மண்டபம் ரோடு, சர்தார் பட்டேல் ரோடு, கோட்டுர்புரம், ஸ்ரீநகர் காலனி, வெங்கடபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோயில் தெரு, கனகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1வது முதல் 4வது தெரு, கே பி நகர் 1வது மெயின் ரோடு.

நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ‘பார்க்’ செய்கிறீர்களா? பறிமுதல் செய்யப்படும் என NHAI எச்சரிக்கை

வாகனப் பறிமுதல், ஏலம், அபராத வசூல் ஆகிய பணிகளைக் கவனிக்க சிறப்புக் குழுக்களும் தயாராகி வருகின்றன.

நெடுஞ்சாலைகள் தொடர்பான அனைத்து முடிவுகளுமே நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சட்டப்பிரிவு 24, 26, 27, 30, 33, 36, 37 மற்றும் 43 ஆகியவற்றின் கீழ் நெடுஞ்சாலை குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கப்பட உள்ளன.

வாகனப் பறிமுதல், ஏலம், அபராத வசூல் ஆகிய பணிகளைக் கவனிக்க சிறப்புக் குழுக்களும் தயாராகி வருகின்றன. நெடுஞ்சாலை போக்குவரத்து விதி, பார்க்கிங், ஆக்கிரமிப்பு, சட்டவிரோத பேனர் விளம்பரங்கள் என அனைத்து குற்றங்களுக்கும் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது